ஸ்ரீவைகுண்டத்தில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் ஸ்ரீவைகுண்டம் வட்ட சட்டப்பணிகள் குழு அரசு துறைகளுடன் இணைந்து புதிய வடிவிலான சட்ட சேவை முகாம் நடந்தது.
தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிபதி, தூத்துக்குடி மாவட்ட சட்டப்பணிகள் குழு சாருஹாசினி தலைவர் தலைமை வகித்தார். ஸ்ரீவைகுண்டம் மாவட்ட உரிமையியல் நீதிபதி ஆஷா கௌசல்யா சாந்தினி வரவேற்றார். ஸ்ரீவைகுண்டம் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிபதி முருகன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
இந்த முகாமில் அரசு துறைகளான மாவட்ட தொழிலாளர் நலத்துறை, வருவாய்த்துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, சமூக நலத்துறை, ஊனமுற்றோர் மறுவாழ்வு நலத்துறை, மாவட்ட குழந்தைகள் நலத்துறை, வேளாண்மைத்துறை, மகளிர் மேம்பாடு மற்றும் வறுமை ஒழிப்புத்திட்டம் துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, காவல்துறை, வங்கி, தாட்கோ என அனைத்து அரசு துறைகளும் இந்த முகாமில் பங்கேற்றது.
மாவட்ட வருவாய் அலுவலர் வீரப்பன், ஸ்ரீவைகுண்டம் தாசிலர் தாமஸ் பயஸ் அருண், டி.எஸ்.பி. மகேந்திரன், வழக்கறிஞர் சங்க தலைவர் ª பருமாள் பிரபு, செயலாளர் சங்கரலிங்கம், கிராம உதயம் தொண்டு நிறுவன இயககுனர் சுந்தரேசன், மாவட்ட சுகாதார பணிகள் துணை இயககுனர் கீதாராணி, கருங்குளம் வட்டார வளர்ச்சி அலுவலர் கிரி, வசந்தா, பாளையங்கோட்டை சித்த மருத்துவமனை சீட்டு அறக்கட்டளை சாமுசேல் பெஞ்சமின் மாவட்ட வேளாண்மை துறை அலுவலர் விஜயா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மனஅழுத்தம் குறித்து காவல்துறையினருக்கு ஆலோசனை வழங்கப்பட்டது. பட்டா மாற்றம், புதிய வீட்டு மனை பட்டா பெற, தொழில் தொடங்குவதற்கு நிதி வேண்டுதல் என அனைத்து துறைகளுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டது. இதனால் ஏராளாமான பொதுமக்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீவைகுண்டம் வட்டச்சட்ட பணிகள் குழுவினர் செய்திருந்தனர்.


