தமிழகத்தில் ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 12ம் தேதி தொடங்கியது.
இந்நிலையில் ஸ்ரீவைகுண்டடம் சட்டமன்றத் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் போட்டியிடும் சேகர் இன்றைய தினம் ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியர் அலுவலகத்தில் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ஜீவரேகாவிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது ஸ்ரீவைகுண்டம் தொகுதி வேட்பாளராக நியமிக்கப்பட்டுள்ள நான் இந்திய அரசியல் அமைப்பின் மீது முழுமையான நம்பிக்கை கொண்டு இந்திய ஒருமைப்பாட்டை நிலை நிறுத்துவேன் என ஆண்டவர் மீது உறுதி கூறுகிறேன் என உறுதிமொழி எடுத்துக்கொண்டார்.
இதில் சமூக நல பாதுகாப்புத்திட்ட வட்டாட்சியர் ரமேஷ், சாத்தான்குளம் வட்டாட்சியர் செல்வகுமார், தேர்தல் துணை வட்டாட்சியர் சிவக்குமார், மற்றும் சமத்துவ மக்கள் கட்சி ஒன்றிய செயலாளர் தேவராஜன், மக்கள் நீதி மய்யம் கட்சி தெண்மண்டல இளைஞரணி செயலாளர் பிரகாஷ் ஆகியோர் உடனிருந்தனர்.