தூத்துக்குடி மாவட்டத்தில் நடப்பாண்டில் 7200 ஹெக்டேர் பரப்பளவில் வாழை சாகுபடி பயிரிடப்பட்டுள்ளது. 29.11.2017 மற்றும் 30.11.2017 ல் ஏற்பட்ட ஒகிபுயல் தாக்கியதில் திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம் மற்றும் சாத்தான்குளம் வட்டத்தில் வாழை பயிர் செய்ததில் 488 ஹெக்டேர் வாழை பரப்பு சேதமடைந்தது.
விவசாயிகளுக்கு நிவாரண தொகை வழங்கும் பொருட்டு ஒகிபுயலால் பாதிக்கப்பட்ட வாழை பயிர்களுக்கான நிவாரணம் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது, இத்திட்டத்தின் படி பாதிக்கப்பட்ட வாழை விவசாயிகளுக்கு மாநில பேரிடர் மேலாண்மை நிதியிலிருந்து ஹெக்டேருக்கு ரூபாய்.13,500/- வழங்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்டத்தில் ஒகி புயலால் பாதிப்படைந்த திருச்செந்தூர் தாலுகாவில் சேர்ந்தமங்கலம், சேதுக்குவாய்த்தான், மேல ஆத்தூர், ஆத்தூர், அங்கமங்கலம், சுகந்தலை, நல்லூர், புரையூர், நாலுமாவடி, ராஜபதி, அம்மன்புரம், கானம்,வீரமாணிக்கம், மேலதிருச்செந்தூர், கீழதிருச்செந்தூர் மற்றும் மூலக்கரை கிராமங்களில் 873 விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஸ்ரீவைகுண்டம் தாலுகாவில் முக்காணி, கொற்கை, கொட்டாரங்குறிச்சி, வாழவல்லான், கொடுங்கனி, கீழப்பிடாகை அப்பன்கோவில், வல்லநாடு மற்றும் தோழப்பன்பண்ணை, முறப்பநாடு, நானல்காடு, மணக்கரை, கொங்கராயக்குறிச்சி மற்றும் ஆறாம்பண்ணை ஆகிய கிராமங்களில் 166 விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. சாத்தான்குளம் தாலுகாவில் அரசூர்-ஐ, அரசூர்-ஐஐ, நடுவக்குறிச்சி, கொம்மடிக்கோட்டை, திருப்பணி புத்தன்தருவை, சாஸ்தாவிநல்லூர் மற்றும் பள்ளக்குறிச்சி ஆகிய கிராமங்களில் 111 விவசாயிகளுக்கும், மொத்தத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் 1150 விவசாயிகளுக்கு ரூ.65.76 இலட்சம் வழங்கப்பட்டுள்ளது. இத்தொகை சம்பந்தப்பட்ட விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக மின்னணு பரிவர்த்தனை மூலம் வரவு வைக்கப்பட்டுள்ளது.
மேலும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தேசிய வேளாண்மை அபிவிருத்தி திட்டத்தின்கீழ், வாழை விவசாயிகள் வாழ்வாதார பாதுகாப்பு திட்டத்தில் வாழை சாகுபடி செய்ய ரூ.171.15 லட்சம் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது. ஒரு ஹெக்டேர் வாழை பயிர் செய்ய முதல் வருடம் ரூ.26,250/-, இரண்டாம் வருடம் ரூ.8,750/- ஆக மொத்தம் ரூ.35000/- வாழை விவசாயிகள் வாழ்வாதார பாதுகாப்பு திட்டத்தில் வழங்கப்பட உள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் என்.வெங்கடேஷ், தெரிவிக்கிறார்கள்.