ஸ்ரீவைகுண்டத்தில் கஸ்பா குளம் சீரமைப்பு பணி தீவிரமாக நடந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் விவசாயமே பிரதான தொழிலாக உள்ளது. நெல்லை மாவட்டத்தில் உற்பத்தியாகும் தாமிரபரணி ஆற்றின் பாசனத்தை நம்பி ஸ்ரீவைகுண்டம் பகுதிகளில் சுமார் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் நெல், வாழை, வெற்றிலை சாகுபடி செய்யப்படுகிறது. மருதூர் மேலக்கால், கீழக்கால் ஸ்ரீவைகுண்டம் அணையின் வடகால், தென்கால் மூலமாக 53 பாசன குளங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. இந்த பாசனக்குளங்கள், பாசன வாய்க்கால்கள் அனைத்தும் பொதுப்பணித்துறையினரின் கட்டுப்பாட்டில் உள்ளது. இதில் பெரும்பாலான குளங்கள் தூர்வாரப்படாமல் பாழ்பட்டு கிடக்கிறது. விவசாயிகள் வேண்டுகோளின்படி கலெக்டர் சந்தீப் நந்தூரி உத்தரவு, சப் கலெக்டர் பிரசாந்த் ஆலோசனையின் பேரில், ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் தாமஸ்பயஸ் அருள், அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் தனியார் நிறுவனங்கள், விவசாயிகளின் பங்களிப்புடன் பாசனக்குளங்களை தூர் வாரும் பணி நடந்து வருகிறது. இதனடிப்படையில் கடந்த 20ம்தேதி ஸ்ரீவைகுண்டம் கஸ்பா குளத்தினை தூர் வாரும் பணி துவங்கியது.
இப்பணிகளை அண்ணா பல்கலைக்கழகம், ஏம்ஸ் பவுன்டேஷன், விவசாய சங்கங்களின் பங்களிப்புடன் வருவாய்த்துறையினர் செய்து வருகின்றனர்.
ஸ்ரீவைகுண்டம்பத்மநாபமங்கலத்தில்துவங்கிபேட்மாநகரம்அருகே ஸ்ரீமூலக்கரைவரைபரந்துவிரிந்துகிடக்கும்கஸ்பாகுளம்விவசாயத்திற்கும், நிலத்தடிநீருக்கும்ஆதாரமாகஉள்ளது. சுமார் 20ஆண்டுகளுக்கும்மேலாகஇந்தகுளத்தில்பராமரிப்புபணிகள்மேற்கொள்ளப்படவில்லை.இதனால், கஸ்பாகுளம்முழுவதும்வேலிக்காத்தான், அமலைச்செடிகள், சீமைக்கருவேலமரங்கள், காட்டுச்செடிகள்ஆக்கிரமித்துதண்ணீரைபோதுமானஅளவில்தேங்கிவைக்கமுடியாதநிலைஏற்பட்டது. இந்தகுளத்தில்இருந்துஅடுத்தகுளத்திற்குதண்ணீரைகொண்டுசெல்வதிலும்சிக்கல்நிலவியது. இந்நிலையில், கஸ்பாகுளம்துரிதகதியில்சீரமைக்கப்பட்டுவருவதுகண்டுபாசனவிவசாயிகள்மற்றும்அப்பகுதிபொதுமக்கள்பெரும்மகிழ்ச்சிஅடைந்துள்ளனர்.
இந்தப்பணியை துவங்கி வைத்த கலெக்டர் சந்தீப் நத்தூரி கூறியது போன்று பொதுப்பணித்துறையினர் குளங்களின் பாசன மடைகளையும் மழைக்காலத்திற்கு முன்பாக சீரமைத்து தந்திடவேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.