ஸ்ரீவைகுண்டம் ஒன்றியத்தில் தார்சாலைகள் 10 வருடங்களாக சேதமடைந்த நிலையில் மோசமாக இருப்பதாக சமக புதிய சாலை போட வலியுறுத்தி கலெக்டர் யிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் கலெக்டர் பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்டார்.அதில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி ஸ்ரீவைகுண்டம் ஒன்றிய செயலாளர் தேவராஜ் மற்றும் கட்சியினர் கொடுத்த மனுவில், கூறியதாவது.
ஸ்ரீவைகுண்டம் ஒன்றியத்தில் உள்ள ஏரல் தாமிரபரணி ஆற்று மேம்பாலத்தில், இரவு நேரங்களில் பொதுமக்கள், வியாபாரிகள் செல்வதற்கு மின்விளக்கு வசதி செய்து தர வேண்டும். மேலும் ஸ்ரீவைகுண்டம் ஒன்றியத்தில் உள்ள தார்சாலைகள் 10 வருடங்களாக சேதமடைந்த நிலையில் மோசமாக இருக்கின்றன. இதனால் பொதுமக்கள், விவசாயிகள், வியாபாரிகள், பள்ளி மாணவ- மாணவிகள் சிரமப்படுகிறார்கள். எனவே மாவட்ட நிர்வாகம் சேதமடைந்த சாலைகளை உடனடியாக சரிசெய்து தர வேண்டும் என்று கூறி இருந்தார்