
ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள ராமானுஜம் புதூரில், புத்தர் பிறந்த நாள் விழா, அம்பேத்கர் பிறந்த நாள் விழா, அம்பேத்கர் காவியம் கவிதை நூல் வெளியீட்டு விழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது.
விழாவுக்கு கலைஞர் வடவை குயில் தலைமை வகித்தார். மும்பை தொழிலதிபர்கள் ராமச்சந்திரன், துரைசேட், திருநெல்வேலி வட்டாட்சியர் பால்துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழா அமைப்பாளர் பிச்சமணி வரவேற்றார்.
திருநெல்வேலி தூர்தர்ஷன் துணை இயக்குநர் நவநீத கிருஷ்ணன் புத்தர் உருவப் படத்துக்கும், தமிழ் வளர்ச்சி பண்பாட்டு மைய துணைத் தலைவர் வழக்குரைஞர் தங்கசாமி அம்பேத்கர் உருவப்படத்துக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கலந்துகொண்டு, அம்பேத்கர் காவியம்’ என்ற கவிதை நூலை வெளியிட, மும்பை லெமுரியா அறக்கட்டளை தலைவர் குமணராஜன் பெற்றுக்கொண்டார். எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராஜ் வாழ்த்திப் பேசினார்.
நூலாசிரியர் ராசி.பூபாலன் ஏற்புரை வழங்கினார். வன்னி சபாரத்தினம் நன்றி கூறினார்.