ஸ்ரீவைகுண்டம் அரசு பேருந்து போக்குவரத்து பணிமனையில் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.
ஸ்ரீவைகுண்டம் மக்கள் நலச்சங்கம் என்ற சமூக வலைதளத்தைச் சேர்ந்த அமைப்பு சார்பாக ஸ்ரீவைகுண்டம் அரசு போக்குவரத்து பணிமனையில் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது. இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீவைகுண்டம் மக்கள் நலச்சங்க தலைவர் ரமேஷ் தலைமை வகித்தார். கிளை மேலாளர் சண்முகம் மரக்கன்றுகளை நட்டார். இந்த நிகழ்ச்சியில் மக்கள் நலச்சங்கத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.


