தாமிரபரணி ஆற்றின் கடைசி அணைக்கட்டு ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டு. இந்த அணைக்கட்டு ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தான் ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டு பகுதியில் இருந்து ஆற்றில் தூர்வாரப்பட்டது.
மேலும் கடந்த வருடம் மாவட்ட ஆட்சியர் மற்றும் ஸ்ரீவைகுண்டம் வட்டாச்சியர் முயற்சியால் அணைக்கட்டின் கீழ்பகுதியில் காணும்பொங்கல் கொண்டாடும் வகையில் தூய்மை செய்யப்பட்டது. அதன்பின்னர் ஆற்றின் அருகில் பூங்கா அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்நிலையில் இன்று தூத்துக்குடி மாவட்ட துணை ஆட்சியர் பயிற்சி லாவண்யா பூங்கா அமைக்கும் பணியினை துவக்கி வைத்தார்.
அவருடன் ஸ்ரீவைகுண்டம் வட்டாச்சியர் தாமஸ் பயஸ் அருள் மற்றும் அதிகாரிகள் உடன் வந்தனர்.