தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டத்தில் தாமிரபரணி ஆற்றின் கரையில் திறந்தவெளியில் பொதுமக்கள் மலம் கழிப்பதால் ஆற்றுப்பகுதியும், ஆற்றுநீரும் மிகுந்த அசுத்தம் அடைந்து வருகிறது.
இதனை சீரமைக்க ஸ்ரீவைகுண்டம் மக்கள் நலச்சங்கம் என்ற சமூக வலைதளம் மூலம் ஒன்றிணைந்த இளைஞர்களால் இன்று ஸ்ரீவைகுண்டத்தில் திறந்தவெளியில் மலம் கழிப்பதற்கு எதிரான பிரச்சாரத்தை வட்டாச்சியர் தாமஸ் பயஸ் அருள் துவக்கி வைத்தார்.
அதன்பின்னர் அவர்கள் ஸ்ரீவைகுண்டம் பேருந்து நிலையம், முக்கிய வீதிகளில் துண்டு பிரச்சுரம் வினியோகம் செய்தனர். இந்த நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் பானு, ஸ்ரீவைகுண்டம் பேரூராட்சி செயல் அதிகாரி மணிமொழி செல்வன், ரெங்கசாமி, ஸ்ரீவைகுண்டம் மக்கள் நலச்சங்க தலைவர் ரமேஷ் உள்பட பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.