ஸ்ரீவைகுண்டம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசு விருது பெற்ற டிவிம் சேவா பாலம் அமைப்பு, ஸ்ரீவைகுண்டம் வழக்கறிஞர்கள் சங்கம் மற்றும் ஸ்ரீ வைகுண்டம் மக்கள் நல சங்கத்துடன் இனைந்து நடத்தும் பெண்கள் விழிப்புணர்வு மற்றும் சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது
இந்நிகழ்ச்சியில் ஆசிரியரகள், சமூக ஆர்வலர்கள், காவல் துறை அதிகாரிகள் வழக்கறிஞர்கள், அரசு அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் இந்நிகழ்ச்சில் சுற்று சூழல் தினத்தை முன்னிட்டு மரங்களின் அவசியம் மற்றும் ப்ளாஸ்டிக் விழிப்புணர்வு நிகழ்ச்சியின் முன்னோட்டதையும எடுத்து உரைக்கப்பட்டது. பாலம் அமைப்பு சார்பில் டிவிம் சேவா பாலம் இளைஞர் அணி செயலாளர் மாரிமுத்து விக்னேஷ் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பற்றி நடத்த பட உள்ள கட்டுரைப் போட்டிக்கான தேர்வு குழு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி சார்பில் தலைமை ஆசிரியை செந்துர்கனி அமைக்குமாறு கேட்டுக் கொண்டார் வாழ்த்துரை வழங்கிய டிவிம் சேவா பாலம் நிறுவனர் இருளப்பன் பொதுமக்கள் மற்றும் மாணவியர்கள் சார்பில் ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியர் தாமஸ் பயஸ் அருள் பெண்கள் அரசு மேல்நிலைப் பள்ளிக்கான விளையாட்டு மைதானத்துக்கான கோரிக்கை மனுவை அளித்தார்.
இந்த நிகழ்ச்சியில் மாணவிகளுக்கான விழிப்புணர்வு விளம்பர அறிவிப்பு வெளியீடப்பட்டது. மாணவியர்களுக்கான விழிப்புணர்வு கருத்தக்களை தாசில்தார் தாமஸ் பயஸ் அருள், காவல்துறை ஆய்வாளர் வெங்கடேஷன் ,வழக்கறிஞர்கள் சங்கம் தலைவர் பெருமாள்பிரபு, சங்கம் செயலாளர் சங்கர்லிங்கம், மேலும் வழக்கறிஙர்கள் முத்துராமலிங்கம், ஸ்ரீவைகுண்டம் மக்கள் நல சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் வழக்கறிஞர் ரமேஷ், பிட்சைக்கண்ணன், சந்துரு, லூக் ராஜரத்தினம் தங்கள் கருத்துக்களை பகிர்ந்தனர். மாரிமுத்து நன்றியுரை ஆற்றினார்