ஸ்ரீவைகுண்டத்தில் இலவச கண் பரிசோதனை முகாம் ;தூத்துக்குடி மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் ஏற்பாடு.
தூத்துக்குடி மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், மேலஆழ்வார்தோப்பு கிராம உதயம் மற்றும் கிருஷ்ணன்கோவில் சங்கரா கண் மருத்துவமனை ஆகியவை இணைந்து நடத்திய இலவச கண்பரிசோதனை முகாம் ஸ்ரீவைகுண்டம் குருசுகோவில் சந்தியாகப்பர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
முகாமிற்கு, ஸ்ரீவைகுண்டம் டி.எஸ்.பி.சகாயஜோஸ் தலைமை வகித்தார். ஓய்வுபெற்ற வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜப்பாவெங்கடாச்சாரி, தனிஅலுவலர் ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிராமஉதயம் கிளைமேலாளர் வேல்முருகன் வரவேற்றார்.
முகாமில், சங்கரா கண் மருத்துவமனை மருத்துவக்குழுவினர் டாக்டர்.ராமபிரியா தலைமையில் பொதுமக்களுக்கு கண் பரிசோதனை செய்து தகுந்த ஆலோசனைகளை வழங்கினர். முகாமில், ஸ்ரீவைகுண்டம், குருசுகோவில், பேட்துரைச்சாமிபுரம், நளன்குடி, புதுக்குடி, வெள்ளூர், ஆழ்வார்தோப்பு உட்பட சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று பயன் அடைந்தனர். முகாமின் முடிவில் 23பேர் கண்அறுவை சிகிச்சைக்காக தேர்வு செய்யப்பட்டு கிருஷ்ணன்கோவில் சங்கரா கண்மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
முகாமில், இலவச மருத்துவப்பிரிவு துறை பொறுப்பாளர் கண்ணன், மையத்தலைவர்கள் செல்வி, கோமதி, தன்னார்வ தொண்டர் முத்துராஜ் மற்றும் பணியாளர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில், பகுதி பொறுப்பாளர் முருகசெல்வி நன்றி கூறினார்.