தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு மலைப்பகுதியில் மான்கள் சரணாலயம் உள்ளது. இங்கு ஏராளமான மான்கள், மிளா போன்ற அரியவகை உயிரினங்கள் வாழ்கின்றன. தற்போது போதிய பருவமழை இல்லாததால் மலைப்பகுதியில் உள்ள குளம், குட்டைகள் தண்ணீரின்றி வறண்டு விட்டது. இதனால் வனவிலங்குகள் தண்ணீரை தேடி மக்கள் வசிக்கும் பகுதிக்குள் வருகின்றன.
இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம் அருகிலுள்ள வைரவன் கிராமத்துக்குள் மிலா என்ற அரியவகை உயிரினம் சுமார் ஒரு மாதமாக நடமாடி வருகிறது. வனத்துறை அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தும் இதுவரை எந்தவித மீட்பு நடவடிக்கையும் எடுக்கவில்லை என மக்கள் தெரிவிக்கின்றனர். எனவே அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து வனத்தில் விடவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்