தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள கொம்மடிக்கோட்டையில் சாத்தான்குளம் வட்டார தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் சேவியர் சுதாகர் மறைவிற்கு இரங்கல் தெரிவிப்பதற்காக வருகை தந்தார்.
அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
தற்போது உள்ள சூழ்நிலையில் காவேரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு தாமதப்படுத்தாமல் அமைக்க வேண்டும். வருகின்ற 9ம் நல்லத்தீர்ப்பையும் உடனடித்தீர்ப்பையும் நீதிமன்றம் வழங்கும் என்று நம்புகிறோம். ஏற்கனவே இந்த காவேரி தண்ணீர் பிரச்சனையில் தமிழக விவசாயிகள் வஞ்சிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் நல்லத்தீர்ப்பு வரும் என்று காத்திருக்கிறார்கள். அவர்களுடைய பொறுமையை மத்திய அரசு இனியும் சோதித்து பார்க்க கூடாது என்று கேட்டுக்கொள்கிறேன். அண்ணா பல்கலைகழகத்திற்கு தமிழகத்தை சேர்ந்த ஒருவர் நியமிக்கப்பட்டிருந்தால் மேலும் அது தமிழகத்திற்கு பெருமை சேர்த்திருக்கும். தமிழகத்தில் மெத்தை படித்தவர்கள் நிறைய பேர் உள்ளனர் என்பதில் எந்தவித மாற்றுக்கருத்தும் கிடையாது. காவேரி பிரச்சனையில் தற்போது உள்ள சூழ்நிலையில் எரிகின்ற தீயில் எண்ணெய் ஊற்றுவது போல் ஆளுநர் மாளிகையில் இருந்து துணைவேந்தர் அறிவிப்பு என்பது முறையல்ல சரியல்ல. ஏற்புடையதல்ல. தலித் மக்களுக்கு பாதுகாப்பு தேவை என்பதில் எந்தவித மாற்றுக்கருத்தும் கிடையாது. அதை உறுதி செய்யும் வகையில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கும் என்று நம்புகிறோம். ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து போராடும் மக்களை சந்தித்து எங்கள் ஆதரவை தெரிவித்துள்ளோம். மத்திய மாநில அரசுகள் இதன் உண்மை தன்மையை ஆராய்ந்து போராடும் மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும் வகையில் வரும் நாட்களில் முடிவுகள் எடுக்க வேண்டும் என்று நம்புகிறேன். என்றார்.