
டெல்லி: 2018 ஆம் ஆண்டில் இயற்கை எரிவாயு ஜி.எஸ்.டி வரம்புக்குள் சேர்க்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை மாதம் முதல் தேதியில் அமல்படுத்தப்பட்ட ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையில் கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் போன்றவை சேர்க்கப்படவில்லை. இந்நிலையில் இயற்கை எரிவாயுவை ஜிஎஸ்டிக்குள் சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளது. ஜனவரி மாதம் நடக்கும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால், பெருவாரியான மக்கள் பயன்படுத்தும் பெட்ரோல், டீசல் ஆகியவை ஜிஎஸ்டி வரி விதிப்பில் சேர்ப்பது குறித்து எந்த திட்டமும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எண்ணெய் நிறுவனங்களின் விலை கட்டுப்பாட்டில் இருக்கும் பெட்ரோல், டீசல் மூலம் மத்திய மாநில அரசுகள் அதிக வருவாய் ஈட்டி வருவது குறிப்பிடத்தக்கது. பெட்ரோல் டீசலை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வந்தால், அதிகளவு விலை குறையும். இதேபோல் பெட்ரோலிய பொருட்களின் விலையும் குறைந்து எளிய மக்கள் பயனடைவார்கள் என்ற கருத்து எழுந்துள்ளது.