தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் அருகே உள்ள சின்னமாடன் குடியிருப்பைச் சேர்ந்தவர் மாசி என்ற மாசானமுத்து. இவர் விவசாய தொழில் செய்து வருகிறார். இன்று காலை பக்கத்து வீட்டினருடன் பிரச்சனை காரணமாக நாசரேத் போலிசார் இவரை விசாரனைக்காக அழைத்துச் சென்றனர்.
அங்கு அவரை சப்&இன்ஸ்பெக்டர் துரை விசாரனை என்ற பெயரில் சரமாரியாக அடித்து உதைத்தாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த விவசாயி மாசானமுத்து மனமுடைந்து சாத்தான்குளத்தில் உள்ள நூலகம் முன்பு பூச்சிமருந்து குடித்து விட்டு படுத்துக்கொண்டார். இதை அறிந்த அந்த பகுதியைச் சேர்ந்த மக்கள் அவரை மீட்டு சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி செய்யப்பட்டு மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரனை என்ற பெயரில் சரமாரியாக அடித்து உதைத்ததால் மனமுடைந்த விவசாயி தற்கொலை முயற்சி செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.