வல்லநாடு அருகே பஸ் கண்ணாடி உடைப்பு. மனநோயாளியிடம் போலிசார் விசாரணை.
நெல்லையில் இருந்து தூத்துக்குடிக்கு இன்று காலை 8 மணி அளவில் அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. பஸ்ஸில் 80 க்கு மேற்பட்ட பயணிகள் இருந்தனர். பேருந்தை தூத்துக்குடி சங்கராப்பேரியை சேர்ந்த பேச்சி மகன் மந்திரமூர்த்தி(48) ஓட்டி வந்தார். வல்லநாடு அருகே வந்து கொண்டிருந்த போது திடிரென்று சிறுவன் ஒருவன் கல்வீசினான். இதில் பேருந்தின் கண்ணாடியில் கல்வீசப்பட்டதால் உடைந்தது. இதில் முன்பிருந்த பெண் ஒருவர் லேசான காயமடைந்தார்.
இதுகுறித்து உடனே முறப்பநாடு காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. முறப்பநாடு இன்ஸ்பெக்டர் விஜயகுமார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரனை நடத்திய போது வல்லநாடு மாயாண்டி சாமி கோவில் தெருவைச் சேர்ந்த முண்டன் மகன் தம்புராஜ்(18) என்பவர் பேருந்தின் கண்ணாடியை உடைத்தது தெரியவந்தது. தம்புராஜ் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து போலிசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.