வல்லநாடு அருகே உள்ள சேசுராஜபுரம் கிறிஸ்து அரசர் ஆலயம் ஆர்.சி. பங்குக்கு உள்பட்டது. இந்த பங்கு மக்கள் ஒன்றிணைந்து புனித வெள்ளியை முன்னிட்டு சிலுவை பாதை நடைபயணம் மேற்கொண்டனர்.
இதையொட்டி சேசுராஜபுரம் கிறிஸ்து அரசர் ஆலயத்தில் சிறப்பு திருப்பலி நடந்தது. இந்த திருப்பலியை பங்கு தந்தை ª பன்சிகர் நடந்தினார். அதன் பின் சிலுவையை கையில் சுமந்தபடியே சிலுவை பாதை பயணம் துவங்கியது. பயணம் பாறைக்காடு, வல்லநாடு, மியகான்ப்பள்ளி, கிள்ளிகுளம் வழியாக சுப்பிரமணிய புரம் வந்தடைந்தது. அதன் பின் சுப்பிரமணியபுரம் புனித அந்தாணியார் ஆலயத்தில் சிறப்பு திருப்பலி நடந்தது. இந்த திருப்பலியில் ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர். சிலுவை பாதையின் போது தூத்துக்குடி அருட்தந்தை ஸ்டான்லி, ஒய்வு பெற்ற ஆசிரியர்அல்போன்ஸ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.