வல்லநாட்டில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாள் விழா டி.டி.வி.தினகரன் அணி சார்பில் கொண்டாடப்பட்டது-.
வல்லநாடு துவக்கப்பள்ளியில் டிடிவி தினகரன் அணி சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு மதிய உணவு வழங்கினர்.
இந்த நிகழ்ச்சியில் கருங்குளம் ஒன்றியச் செயலாளர் சிவசுப்பிரமணியன் தலைமை வகித்தார். அவைத்தலைவர் பிள்ளைமுத்து, மாவட்ட சிறுபான்மை பொருளாளர் முஸ்தபா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி செயலாளர் குருநாதன் செய்துங்கநல்லூர் ஊராட்சி செயலாளர் திருவரங்கம், பொதுக்குழு உறுப்பினர் திருவரங்கம், மருதநாயகம், ராஜ்பாண்டியன், மாரி, கணேன், பால்ராஜ், தம்பா, ராமையா, குமார், சங்கரலிங்கம், கொம்பையா, பூல்பாண்டி உள்பட பலர் கலந்து கொண்டனர்.