வல்லநாட்டில் அரசு ஆரம்ப சுகாதர நிலையத்தில் காசநோயாளிகளுக்கு மருந்து அளிப்பவர்களுக்கான அரசின் ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சுந்தரி தலைமை வகித்தார். தொற்றா நோய் மாவட்ட திட்ட அலுவலர் டாக்டர் அருண்குமார் முன்னிலை வகித்தார். நம்பிக்கை மைய ஆற்றுப்படுத்துநர் ஐயம்மாள் வரவேற்றார். காசநோய் மைய மாவட்ட நலக் கல்வியாளர் தங்கவேல் திட்ட விளக்கவுரையாற்றினார். காசநோய்க்கு மருந்து அளித்த அங்கன் வாடி பணியாளர்கள் மற்றும் தன்னார்வ உறுப்பினர்களுக்கு அரசின் ஊக்கத் தொகை தலா ஆயிரத்துக்கான காசோலை வழங்கப்பட்டது. வட்டார சுகாதார மேற்பார்வையாளர் அப்துல் ரகுமான் பாட்ஷா, காசநோயாளிகள், அவர்களுக்கு மருந்து அளிப்பவர்கள் மற்றும் சுகாதரா துறை பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். ஏற்பாடுகளை முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் அப்துல் ரஹீம் ஹீரா செய்திருந்தார்.
சுகாதார ஆய்வாளர் ஜாஹிர்கான் நன்றி கூறினார்.


