வல்லநாடு துப்பாக்கி சுடுதளம் அருகே உள்ள விநாயகர், அபிதகுஜலாம்பாள் சமதே அருணாச்சலஸ்வரர் மற்றும் அருணாசல சுவாமி கோயில் 6 வது வருஷாபிசேகம் நடந்தது.
இதையொட்டி மகாசங்கல்பம், விக்னேஷ்வர பூஜை, புன்னியாகாசனம், பஞ்ச காவ்யம், வேதிகா அர்ச்சனை, வேதபாராயணம், ருத்ர ஹோமம், மூலமந்திரம் ஹோமம், 108 சங்கு அபிசேகம், மகா அபிசேகம், விமான அபிசேகம், மற்றும் அலங்கார தீபாரதனைகள் நடந்தது. தொடர்ந்து சுமார் 100 ஆன்மிக பக்தர்கள கலந்து கொண்ட திருவாசகம் முற்றொதுதல் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பூஜைகளை ரவி பட்டர், சந்தோஷபட்டர், ஹரிஹரபட்டர் ஆகியோர் செய்திருந்தனர். வல்லநாடு, கீழவல்லநாடு, தெய்வச்செயல்புரம், மணக்கரை, தோழம்பண்ணை உள்பட பல கிராமங்களில் இருந்து ஏரளமான பக்தர்கள கலந்து கொண்டனர்.