வல்லநாட்டில் மிகவும் பழமையான சிவன் கோயில் ஆவுடையம்மாள் சமேத திருமூலநாதர் ஆலயம். இந்த ஆலயத்தில் தானே முளைத்த லிங்கம் உள்ளதால் மிகவும் விசேஷமாக கருதப்படுகிறது. இக்கோயிலில் உழவாரப்பணி நடந்தது.தூத்துக்குடி சதுர கிரி மகாலிங்க சுவாமிகள் யாத்திரியர்கள் அறக்கட்டளை சார்பில் நடந்த உழவாரப்பணிக்கு ராமமூர்த்தி சுவாமிகள் தலைமை தாங்கி துவக்கி வைத்தார்.
சேதுராமலிங்கம், திருமூலநாதர் கைகங்கர்ய சபை வெங்கட்ராமன், பாரதி சங்கரலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோயிலில் உடைந்து கிடந்த மேல்தடம் சீரமைக்கப்பட்டது. கோயில் வாளகத்தில் உள்ள முள்செடிகள் அகற்றப்பட்டது. கோயில் மதில் சுவர்கள் பராமரிக்கப்பட்டது. மாலையில் திருமூலநாதர், ஆவுடையம்மாள் மற்றும் தெய்வங்களுக்கு சிறப்பு அபிசேகம், அலங்காரம், ஆராதனை நடந்தது. பூஜையை கோயில் தலைமை அர்ச்சகர் சண்முக சுந்தர பட்டர் இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.


