வசவப்பபுரத்தில் புதுமணத்தம்பதியருக்கு பணியரங்க விழா நடந்தது. வல்லநாடு அரசு மருத்துவர் சுந்தரி தலைமை வகித்தார். டி.என்.டி.றி.ஏ துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் ரோஸ்லின் மனோ ரஞ்சிதம் முன்னிலை வகித்தார். குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் செண்பக சரதா சிறப்புரையாற்றினார். வசவப்புரம் செவிலியர் கிருஷ்ணம்மாள் வரவேற்றார். இந்த நிகழ்ச்சியில் 50 ஜோடி புது மணத்தம்பதிகள் கலந்துகொண்டனர். அவர்களுக்கு வினாடி வினா நிகழ்ச்சி நடத்தப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட்டது. குழந்தைகள் கலை நிகழ்ச்சியும் நடந்தன. சுயஉதவி குழு தலைவி முத்துமணி, மேற்பார்வையாளர்கள் லெட்சுமி, வள்ளி நாயகி, சீதா லெட்சுமி, ராணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
&&&