மணக்கரை டி.என்.டி.டி.ஏ நடுநிலைப்பள்ளி புதிய கட்டிடம் திறப்பு விழா நடந்தது.
கொங்கராயககுறிச்சி சேகரகுரு செல்வமணி தலைமை வகித்தார். திருமண்டல பள்ளிகளின் மேலாளர் லூர்துராஜ் ஜெயசிங் முன்னிலை வகித்தார். புதிய பள்ளி கட்டிடத்தினை தூத்துககுடி நாசரேத் திருமண்டல பேராயர் தேவசகாயம் திறந்து வைத்தார். பள்ளி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடந்தது. கொங்கராயகுறிச்சி சேகர செயலர் சுந்தர் ஜெபராஜ், சேகர கமிட்டி உறுப்பினர்கள், பொதுமக்கள், சேகர ஆசிரிய ஆசிரியைகள், மாணவ மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஆசிரியர் பொன் ஆசீர் நன்றி கூறினார்.


