பங்குனி உத்திரத்திற்கு வரும் வாகனங்கள் குறுகிய ஆதிச்சநல்லூர் பாலத்தில் செல்ல முடியாமல் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போலிசார் போக்குவரத்தை சீர் செய்னர்.
நெல்லை – திருச்செந்தூர் மெயின் ரோடு மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த சாலை போக்கு வரத்து நிறைந்தது. இங்கு பயணிகள் மிக அதிகமாக பயணம் செய்கிறார்கள். மாதந்தோறும் நடைபெறும் திருச்செந்தூர் முருகன்கோயில் பூஜைக்கு இந்த சாலை வழியாகத்தான் பாதயாத்திரையாக லட்சகணக்கான பக்தர்கள் சென்று வருகிறார்கள்.
தைபூசம், புத்தாண்டு, மாசி மகம், சித்திரை வருடபிறப்பு, வைகாசி விசாகம் என தொடர்ந்து நடைபெறும் திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு மிக அதிகமாக வாகனங்கள் இந்த வழியாத்தான் சென்று வருகின்றன. இந்த பகுதியில் சாஸ்தா கோயில்கள் மிக அதிகமாக உள்ளன. ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார்திருநகரி, தென்திருப்பேரை, ஏரல், குரும்பூர், திருச்செந்தூர் உள்பட பல பகுதியில் உள்ள சாஸ்தா கோயிலுக்கு இந்த வழியாகத்தான் வானங்கள் சென்று வருகிறது. நேற்று பங்குனி உத்திரம் காரணமான பல ஆயிரக்கணக்கான வாகனங்கள் இந்த வழியாக சென்று வரும் போது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதை செய்துங்கநல்லூர் போலிஸ் சப் இன்ஸ்பெக்டர் சதீஷ் தலைமையில் போலிசார் சீர் ª சய்தனர். ஆயினும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இது குறித்து ஆதிச்சநல்லூர் மலையரசி திருக்கோயில் அறங்காவல்கள் குழு சிவசங்கரலிங்கம் கூறும் போது,
செய்துங்கநல்லூர் – ஸ்ரீவைகுண்டத்துக்கு இடையே ஆதிச்சநல்லூர் பரப்பு பகுதியில் குறுகலான பாலம் ஒன்றுள்ளது. இந்த பாலம் சுமார் 50 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்டது. ஆதிச்சநல்லூர் பரம்பு தொல்பொருள் ஆராய்ச்சி கழகம் கட்டுப்பாட்டுக்குள் வந்த பிறகு இங்கு அவர்கள் அனுமதி யின்றி சாலையை விரிவு படுத்த இயலவில்லை. எனவே மிகவும் குறுகலான இந்த சாலையில் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. சில நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. ஆதிச்சநல்லூர் பரம்பு தொல்பொருள் ஆராய்ச்சி கழகத்தின் கட்டுபாட்டுக்குள் இருப்பதால் இந்த பாலம் அகலப்படுத்தப்படாமலேயே இருந்தது. தற்போது இந்த பாலத்தினை விரிவு படுத்த தொல்பொருள் ஆராய்ச்சி கழகம் அனுமதி அளித்துள்ளது. ஆனாலும் பணி துவங்கியதாக தெரியவில்லை. அதற்கான ஆரம்ப கட்ட வேலை கூட நடைபெறவில்லை. தற்போது பங்குனி உத்தரத்திற்கு வந்த வானங்கள் இந்த பாலத்தில் செல்ல முடியாமல் போக்குவரத்து நெரிசலில் மாட்டிக்கொண்டது. உடனடியாக பாலத்தினை அகலபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
அதிகமான போக்குவரத்து கொண்ட, அடிக்கடி விபத்து ஏற்படும் ஆதிச்சநல்லூர் பாலத்தினை விரிவு படுத்த வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


