தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள பெருங்குளம் செங்கோல் ஆதின திருமடம் ஞான பீடத்தில் 103வது பீடாதிபதியாக விளங்கும் ஸ்ரீலஸ்ரீ சிவப்பிரகாச தேசிய சத்திய ஞான சன்னிதி சுவாமி தலைமையில் ஆதின குரு முதல்வர் குருபூஜை நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் சித்தர் தபோயனத்தில் உள்ள ஆதின குரு மூர்த்திங்கள் வழிபாடு மற்றும் ஆன்மார்த்த மூர்த்தி திரு அழகிய சிற்றம்பலமுடையார்க்கும், ஆதீன குரு முதல்வர் ஸ்ரீ சத்திய ஞான தர்சினி சுவாமிகள் சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்ததினார்கள். குருபூஜை நிறைவாக ஆகமச்சீலர் திருமுறை விண்ணப்பம் திருநெல்வேலி டவுண் திருமுறை கலாநிதி வள்ளிநாயகம் குழுவினர் செய்திருந்தனர்.
விழாவில் இசைகலைஞர், தமிழறிஞர் ஆகியோர்களுக்கு சிவாகம கலாநிதி என்ற சிறப்பு விருதும், 5000 ஆயிரம் பொற்கிழியும், சிவஸ்ரீசெல்வத்திற்கு வழங்கப்பட்டது. இசைக்கலைஞர் சுவாமிநாதனுக்கு நாகசுர கலாநிதி என்ற சிறப்பு விருதும், 5000 ரூபாய் பொற்கிழியும், மங்கைமடம் தங்க அகோர மூர்த்தியின் சிவத்தொண்டை பாராட்டி விருதும், 5000 ஆயிரம் பொற்கிழியும் அளித்து ஆசி வழங்கினார்கள். எட்டையபுரம் வேலாயுதம் லட்சுமி அம்மாள் அறக்கட்டளையின் சார்பாக ஏழை எளிய மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது. சிவத்தமிழ் செல்வர் சிவ.காந்தி குரு பக்தி என்னும் தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார். மதியம் 1 மணி அளவில் மாகேஸ்வர பூஜை நடந்தது.