திருத்தியமைக்கப்பட்ட தேசிய காசநோய்த் தடுப்புத் திட்டம், தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு காசநோய் பிரிவு மற்றும் தேசிய தொழுநோய் ஒழிப்பு திட்டம் இணைந்து நடத்திய மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி மொழித் திட்ட பணியாளர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்ச்சி மேலப் பூவாணியில் நடந்தது. பணித்தள பொறுப்பாளர் பியூலா அழகு வரவேற்றார்.
முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் அப்துல் ரஹீம் ஹீரா, மருத்துவமல்லா மேற்பார்வையாளர் ரவிச்சந்திரன் தொழுநோய் சம்பந்தமாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். இதில் கலந்து கொண்ட அனைவருக்கும் காசநோய் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.
முருகம்மாள் நன்றி கூறினார்.


