மலேசியா தமிழ் சங்கத்துடன் மதுரை காமராஜர் பல்கலை கழகம் இணைந்து நடத்திய விழாவில் மதுரையில் வைத்து நேற்று எனக்கு விருது வழங்குவதாக இருந்தது. நண்பர் தேனி சுப்பிரமணியன் என்னை பரிந்துரை செய்திருந்தார். அதே நேரத்தில் 25 வருடங்களுக்கு முன்பே ஆரம்பகாலத்தில் என்னை மேடையில் அழகு படுத்தி பார்த்த புதுக்குளம் கிராமத்தை சேர்ந்த அன்பு அண்ணன் கோபால் அவர்களின் மகன் லிங்கதுரை திருமணம் நடைபெற்றது. ஒவ்வொரு வருடமும் புதுக்குளத்தில் நடைபெறும் நாடகத்திற்காக சென்னையில் இருந்து வருகை தந்து என்னை கௌரவபடுத்தும் அண்ணன் பெருமாள் அவர்களின் மகள்தான் மணமகள் தங்ககுமாரி. என்னை தான் வரவேற்பாளராக பத்திரிக்கையில் பெயர் பொறித்திருந்தார்கள்.
மிகவும் இக்கட்டான சூழ்நிலை.
உறவா…. எதிர்காலமா?
வளர்த்த இடமா…. வளர்க்க போற இடமா?
என பல கேள்விகள்.
பல்கலைகழகத்தில் விருது என்றால் சாதாரண மான விசேஷம் அல்ல-. ஆயினும் நம்மை ஏற்றிவிட்ட ஏணியை மறக்க முடியமா?
யோசித்துபார்த்தேன். எளியமேடையில் நம்மை ஏற்றி அழகு பார்த்த இடம் தான் நமக்கு சொர்க்க லோகம். என முடிவெடுத்தேன்.
காமராஜர் பல்கலைகழகத்துக்கு நாம் போகவிடில் யாரும் தேடப்போவதில்லை. ஆனால் புதுக்குளம் அண்ணன் வீட்டில் நான் இல்லை என்றால் என்னை பலரும் தேடுவார்கள்.
அது மட்டுமல்ல.. கிராமத்தில் அண்ணன் நடத்தும் நிகழ்ச்சியில் நாம் இல்லாமல் இருந்தால் நன்றாக இருக்காது.
கடந்த 25 வருடகாலமாக நான் புதுக்குளம் நாடக மேடையில் கூறும் வார்த்தை.. ‘எத்தனை உயர்வு வந்தாலும்.. புதுக்குளம் விழா என்றால் ஓடோடி வருவேன்’ என்று கூறினேன்.
அதை சோதித்து பார்க்கத்தான் இறைவன் இப்படியொரு இக்கட்டான சூழ்நிலையை ஏற்படுத்தி விட்டான் என நினைத்தேன். எத்தனை உயரம் சென்றாலும் புதுக்குளத்தினை மறக்கமுடியுமா?
எனவே புதுக்குளம் வந்தேன். தம்பி லிங்கதுரை தம்பதிகளை வாழ்த்தி பேசினேன். நிம்மதியாய் இருந்தது. இதை விட பெரிய விருது எங்கே கிடைக்கும்.
என்னை மதுரை காமராஜர் பல்கலைகழகத்தில் விருதுக்கு பரிந்துரை செய்த நண்பர் தேனி சுப்பிரமணியன் அவர்களே.. என்னை மன்னித்து விடுங்கள். மற்றொரு நிகழ்ச்சியில் உங்கள் அழைப்பை ஏற்று அங்கே வந்து சேருகிறேன்.