
பிரமாண்டமான கோயில் என்றால் அது பிரம்ம தேசம் தான். பிரம்ம தேசம். படைப்புலக வேந்தன் பிரம்மாவின் பேரன் உரோமச மகரிஷியின் பிரமிப்பு தேசம். பிரபலமான கோயிலும் கூட, நடிகை ராதிகா அவர்களின் அண்ணாமலை சீரியல் இந்த கோயிலில் தான் படம் பிடிக்கப்பட்டது. எங்கு திரும்பினாலும் சிறப்பு . நம்மை வரவேற்கும் பிரமாண்டமான கதவு, பெரிய நந்தி, கல்லில் நாக்குடன் காணப்படும் மணி, பிரமாண்டமான மண்டபம், நின்ற நிலையில் சிவபெருமான் பிட்ஷானர் சபை. பிரம்மாவின் பேரன் உரோமச மகரிஷிவழிபட்ட தலம்.சரஸ்வதிக்கு தனி சன்னதி. கோயிலை சுற்றி பல கோபுரம் கொண்ட தனித்தனி சன்னதி, சேரர், சோழர், பாண்டியர், நாயக்கர் மன்னரின் கலை வண்ணம் நிறைந்த கோவில், கால்மாறிய ஆத்ம தட்சிணா மூரத்தி, சொல்லிக்கொண்டே போலாம். அந்த பிரமாண்டமான ஆலயத்தில் ஒரு சோக சம்பவம்.
ஆம்.
பிரமாண்டமான முன் கோபுரத்தில் கீறல் விழுந்துள்ளது. இதை உடனடியாக திருப்பணி செய்ய வேண்டும். இல்லையென்றால் நாம் அந்த கோபுரத்தினையே இழக்கவேண்டிய நிலை உள்ளது.
பக்தர்கள் இந்த கோயிலை காப்பாற்ற வேண்டும் என்று கூற மாட்டேன். நமது முன்னோர்கள் நமக்கு விட்டு சென்ற அரிய பொக்கிஷம் பிரம்மதேசம். அதை காப்பாற்ற ஒவ்வொரு தமிழனும் முயற்சி செய்ய வேண்டும். ஒருகாலத்தில் தாலூகா தலைநகராக இருந்து அதை விட்டு கொடுத்தது பிரம்மதேசம். மன்னர்காலத்திலேயே பிரமாண்டமாக இருந்தது என்பதை இந்த கோயிலின் முன்கதவே உணர்த்தும். அந்த கதவில் யானை வந்து மோதி உடைத்து விடக்கூடாது என்பதற்காக பிரத்யோக அமைப்பு கொண்டவை. மறைந்திருந்து எதிரிகளை கண்காணிக்கும் அமைப்பில் உருவாக்கப்பட்ட மதில் சுவரில் ஒரு ஓடுதளம்.
இவ்வளவு சிறப்பு மிக்க மற்றொரு ஆலயத்தினை நம்மால் உருவாக்க முடியாது. ஆனால் காப்பாற்றலாமே.
காப்பாற்றுவோம். திரைப்பட இயக்குனர் தங்கசாமி. இந்த ஆலயத்தினை பார்த்தவுடன் இங்கு படப்பிடிப்பு நடத்தலாம் அந்த அளவுக்கு சிறப்பு உள்ளது என்றார்.
அந்த அளவுக்கு சிறப்பான….
பிரம்மதேசம் காப்பாற்ற பட வேண்டும் என்றும் கூறினார்.
காப்பாற்ற நாம் என்ன செய்ய போகிறோம் என்பது தான் கேள்வி குறி.