தூத்துக்குடி மாவட்டத்தில் 2016-17 ஆம் ஆண்டு பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு மேலும் ரூ.36.248 கோடி பயிர் காப்பீட்டு தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஆட்சியர் என்.வெங்கடேஷ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தூத்துக்குடி மாவட்டத்தில் 2016-17ல் நெல் பயிருக்கு பயிர் காப்பீடு செய்த 1960 விவசாயிகளுக்கு ரூ.2.923 கோடியும், மக்காச்சோளப் பயிருக்கு 18714 விவசாயிகளுக்கு ரூ.59.836 கோடியும், பாசிப் பயிருக்கு 9895 விவசாயிகளுக்கு ரூ.20.731 கோடியும் ஏற்கனவே பெறப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது.
மேலும் தற்போது கூடுதலாக, மிளகாய் பயிர் காப்பீடு செய்த 8494 விவசாயிகளுக்கு ரூ.32.604 கோடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் வங்கிகள் மூலமாகவும் வழங்க காப்பீடு நிறுவனத்தால் ஒதுக்கீடு பெறப்பட்டு வழங்கப்பட உள்ளது எனவும், மக்காச்சோளப் பயிர் காப்பீடு செய்த 1015 விவசாயிகளுக்கு காப்பீடு நிறுவனத்தில் இருந்து நேரடியாக சம்மந்தப்பட்ட வங்கிக் கணக்கிற்கு மாற்றம் செய்ய ரூ.3.644 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது என மாவட்ட ஆட்சியர் என். வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.