சாத்தான்குளம் அரசு பொது நூலகத்தில் நாடக கலைஞர்களுக்கு பாராட்டு விழா மற்றும் சமூக சிந்தனையாளர்களுக்கு விருது வழங்கும் விழா அண்மையில் நடைபெற்றது.
விழாவுக்கு, தமிழ்நாடு கலை இலக்கிய நாடக நடிகர்கள் சங்கத் தலைவர் ஒஹோ பாலச்சந்தர் தலைமை வகித்தார். முன்னாள் பேரூராட்சித் தலைவர் ஏ.எஸ். ஜோசப், ஓய்வுபெற்ற அஞ்சலக அலுவலர் ஈஸ்வர்சுப்பையா, திருவள்ளுவர் கலா மன்ற தலைவர் கணபதி, முன்னாள் அரிமா சங்கத் தலைவர் தங்கராஜ், நாடக நடிகர்கள், கிருஷ்ணகுமாரி, அனுராணி, அருணாச்சலம்,அஸீஸ் வகாப், அம்பிகா ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழறிவு மன்ற உறுப்பினர் பிரகாஷ் வரவேற்றார். இதில், முத்தமிழ் மன்றத் தலைவர் கவிஞர் பெ.மு.சுப்பிரமணியம், செயலர் கா. முருகேசன், வழக்குரைஞர் க. வேணுகோபால், ஓய்வுபெற்ற பேராசிரியர் இப்திகார் உள்ளிட்ட பலர் பேசினர்.
இதில் தமிழறிவு மன்ற நிறுவனர் தலைவர் வீ.சு.காசி நினைவாக சமூக சிந்தனையாளர்கள் மகா. பால்துரை, ச.மகராஜன் ஆகியோருக்கு விருதுகளும், நாடக கலைஞர்கள் மாரியப்பன், செல்வக்குமார் ஆகியோரை பாராட்டி நினைவுப் பரிசுகளும் வழங்கப்பட்டன.
இதில் புளியடி மாரியம்மன் டிரஸ்டி குழு உறுப்பினர் து. சங்கர், அங்காள பரமேஸ்வரி கோயில் தர்மகர்த்தா முருகன், ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் ஜான்லூயிஸ், வழக்குரைஞர்கள் அந்தோணிபிச்சை, சுப்பையா, கவிஞர் சீத்தாராமன், நூலகர் சுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். நூலகர் சித்திரைலிலிங்கம் நன்றி கூறினார்.