சாத்தான்குளம் அருகே மோட்டார் சைக்கிளிலிருந்து தவறி விழுந்து காயமடைந்த இளைஞர் புதன்கிழமை உயிரிழந்தார்.
சாத்தான்குளம் அருகே உள்ள கலுங்குவிளையைச் சேர்ந்தவர் ச.தினேஷ் அபிஷேக் (23). இவர் கடந்த 3ஆம் தேதி மீரான்குளத்தில் நடைபெற்ற கபடி போட்டியை காண மோட்டார் சைக்கிளில் சென்றாராம். பின்னர் இரவு 11 மணி அளவில் ஊர் திரும்பினாராம். அப்போது பெருமாள்குளம் விலக்கு அருகே மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி விழுந்ததில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதையடுத்து திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், அங்கு புதன்கிழமை இறந்தார். இதுகுறித்து சாத்தான்குளம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


