என்னுடைய ‘அத்ரி மலை யாத்திரை’ நூல் வெளியிட்ட பின்பு தோரணமலைக்கும் எனக்கு உண்டான இணைப்பு மிக அதிகமானது. ஒவ்வொரு தை பூசத்திருவிழாவிற்கும் நான் அங்கு சென்று வருவதை வழக்கமாக கொண்டுள்ளேன். இந்த ஆண்டு அழைப்பிதழில் நான் எழுதிய வாசகங்களை கொண்டு அழைப்பிதழ் தயார் செய்துள்ளார்கள் நிர்வாகத்தார்.
கடையம் சுற்று பகுதி மக்கள் மட்டுமல்லாமல் தற்போது உலக மக்களே வியந்து போற்றும் தோரணமலையில் தைபூச இதழ் இணைப்பில் என் பெயர் வந்துள்ளது என நினைக்கும் போது என் வாழ்வில் பேரின்பம் என்றே நினைக்கிறேன். இதற்கு ஏற்பாடு செய்த தர்மகர்த்தா அய்யா ஆதிநாரயணன் அவர்களுக்கும், அவரது மகன் செண்பகராமன் அவர்களுக்கும், குடும்பத்தாருக்கும் எனது நன்றி.
நண்பர்களே சந்திரகிரகணம் உள்ள காரணத்தினால் அனைத்து நிகழ்ச்சிகளும் காலையிலேயே நடைபெறுகிறது. எனவே அனைவரும் கலந்துகொள்ளவேண்டுகிறேன்.