தோப்பூரில் சிவராத்திரியை முன்னிட்டு சிறப்பு திருவிளக்கு பூஜை நடந்தது.
தூத்துக்குடி தெற்கு மாவட்ட இந்து முன்னணி சார்பில் சாத்தான்குளம் ஒன்றியம் தோப்பூரில் சிவராத்திரி விழாவையொட்டி திருவிளக்கு பூஜை நடந்தது.
பூஜைக்கு மாவட்ட பொது செயலாளர் சத்திவேலன் தலைமை வகித்து தொடங்கி வைத்தார். நாசரேத் இந்து அன்னையர் முன்னணி நகரத் தலைவி பரமேஸ்வரி பூஜையை வழி நடத்தினார். இதில் பெண்கள் பங்கேற்று திருவிளக்கு ஏற்றி பக்தி பாடல்கள் பாடினர். பின்னர் வினாடி வினா பேச்சு போட்டி நடத்தப்பட்டு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் சாத்தான்குளம் ஒன்றிய துணை தலைவர் சுப்பிரமணியன், ஒன்றிய செயற்குழு உறுப்பினர் தங்கபெருமாள், ஒன்றிய செயலாளர் சின்னத்துரை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.