தெற்குகள்ளிகுளம் தெட்சண மாற நாடர் சங்க கல்லூரியில் பயிலரங்கம் நடந்தது.
கல்லூரி தமிழ்துறை சார்பில் நடந்த கோயிற் கலை பன்முக பார்வை என்னும் கருத்தரங்கத்துக்கு சங்க உறுப்பினர் தமிழ்செல்வன் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் பொன்முருகன் முன்னிலை வகித்தார். மாணவி கௌசல்யா வரவேற்பு நடனம் நிகழ்த்தினார். தமிழ்பேராசிரியர் சோனா கிறிஸ்டி வரவேற்றார். தமிழ் துறை தலைவர் நிர்மலா, ஆங்கில துறை தலைவர் தமிழ்செல்வி ஆகியோர் சிறப்புரையாற்றினர். எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு பயிலரங்கத்தினை நடத்தினார்.
பேச்சு போட்டியில் வெற்றி பெற்ற மாணவி தில்லை பொன்சித்ராவுக்கு தமிழ் பேராசிரியர் இந்து கல்லூரி மேனாள் சங்கரன் நினைவு சுழற்கோப்பை வழங்கப்பட்டது. பரிசை நெல்லை உடல் கொடை விழிப்புணர்வு அறக்கட்டளை தலைவர் காசி, செயலாளர் ராஜேந்திரன், உறுப்பினர் குணசீலன், ஒருங்கிணைப்பாளர் நெல்லை கதிர் டிவி இயக்குனர் முத்தமிழ் உள்பட பலர் பேசினர். தமிழ்துறை தலைவர் கிரிஜா நன்றி கூறினார்.