
தென்திருப்பேரை அருள்மிகு அழகிய பொன்னம்மாள் சமேத அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயிலில் பிப். 11ஆம் தேதி அரசு தேர்வெழுதும் மாணவ மாணவியருக்கான சிறப்பு வேள்வி நடைபெறுகிறது.
நவக்கைலாயத் தலத்தில் ஏழாவது புதன் ஸ்தலமான இத் திருக்கோயிலில் அரசு பொதுத் தேர்வெழுதும் (பத்து, பிளஸ் 1, பிளஸ்2) மாணவ மாணவியருக்கு சிறப்பு வேள்வி ஞாயிற்றுக்கிழமை (பிப்.11) காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.
அதனைத் தொடர்ந்து அபிஷேக, அலங்கார தீபாராதனை நடைபெறுகிறது. கல்விக்கு அதிபதியான புதன் ஸ்தலமான இங்கு மாணவ மாணவியர் சிறு பயிறு , பச்சைக் கலர் வேட்டி, துண்டு, தேங்காய் எண்ணெய் செலுத்தி வழிபடுவதால் அதிக மதிப்பெண் பெறலாம் என்பது ஐதீகம்.
இவ் வேள்வியில் மாணவ மாணவியர் கலந்துகொண்டு அருள்மிகு கைலாசநாதர் மற்றும் அருள்மிகு அழகிய பொன்நம்மாள் அருள் பெற்று பயன்பெற கோயில் நிர்வாக அதிகாரி அஜீத் கேட்டுக்கொண்டுள்ளார்.