
தென்திருப்பேரை அருள்மிகு சந்தனமாரி அம்மன் சமேத அருள்மிகு பூதநாத சுவாமி திருக்கோயில் வருஷாபிஷேகம் நடைபெற்றது.
இதையொட்டி கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம் மற்றும் நவக்கிரஹ ஹோமம் நடைபெற்றது. பின் பூர்ணாஹுதி தீபாராதனைக்குப் பின் விமான அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து சுவாமி–அம்மனுக்கு மகா அபிஷேகம், .அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றன. ஹோமம் மற்றும் பூஜைகளை சிவகாமி நாத குருக்கள் தலைமையில் சிவாச்சாரியர்கள் செய்திருந்தனர். நிகழ்ச்சியில் தர்மகர்த்தா நடராஜபிள்ளை உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை சைவ வேளாளர் சமுதாயத்தினர் செய்திருந்தனர்.