தூத்துக்குடி மாவட்டத்தில் வருகின்ற 21 ம் தேதி மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறவுள்ளது
மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுவது குறித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் திரு.என்.வெங்கடேஷ், விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது.
தூத்துக்குடி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் வருகின்ற 21ம் தேதி காலை 10 மணி முதல் காலை 11 மணி வரை நடைபெறவுள்ளது. இக்குறைதீர் கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக அளிக்கலாம். பெறப்படும் மனுக்கள் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களால் தகுதியின் அடிப்படையில் பரீசீலக்கப்படும். முகாமில் கலந்து கொள்ளும் மாற்றுத்திறனாளிகள் தங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை அசல் மற்றும் நகல், குடும்ப அட்டை அசல் மற்றும் நகல், ஆதார் அட்டை நகல் மற்றும் புகைப்படம் ஆகியவற்றை கொண்டு வர வேண்டும்.
எனவே, இந்த வாய்ப்பை மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்திக்கொண்டு பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் என்.வெங்கடேஷ், தெரிவித்துள்ளார்கள்.