தூத்துக்குடி, கோரம்பள்ளம், அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புடன் கூடிய திறன் எய்தும் இலவச பயிற்சி வழங்கப்படுகிறது. இப்பயிற்சியினை முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பும் கிடைத்திட வாய்ப்பு உள்ளது.
பயிற்சி காலம் சுமார் பத்து மாதம் ஆகும். இந்நிலையத்தில் Domestic Electrician, Turning மற்றும் Arc & Gas Welder பிரிவுகளில் பயிற்சி நடத்தப்பட உள்ளது. பயிற்சியில் கலந்து கொள்ளும் பயிற்சியாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.100/-போக்குவரத்து கட்டணமாக வழங்கப்படும். பயிற்சி முடித்தவர்களுக்கு தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தினரால் சான்றிதழ் வழங்கப்படும். பயிற்சியில் கலந்து கொள்ளும் பயிற்சியாளர்கள் 8ம் வகுப்பு முடித்தவர்களும் அதற்கு மேல் படித்தவர்களும் கலந்து கொள்ளலாம்.
இப்பயிற்சியானது 02.04.2018 முதல் தொடங்க இருப்பதால் இதற்கான விண்ணப்பங்கள் 23.03.2018 வரை வழங்கப்படுகிறது. பயிற்சிக்கு வரும் போது அசல் கல்வி ஆவணங்களுடன் 8ம் வகுப்பு முடித்தவர்கள் மதிப்பெண் பட்டியல் அல்லது அதற்கு மேல் படித்த மதிப்பெண் பட்டியல், மாற்று சான்றிதழ், சாதி சான்றிதழ்கள் அசல் மற்றும் ஒரு நகல் 5 புகைப்பட நகல்களுடனும், தேசிய மையமாக்கப்பட்ட வங்கியில் சேமிப்பு கணக்கு துவங்கி வங்கி புத்தகத்தின் ஜெராக்ஸ் நகல்களுடன் இந்நிலைய துணை இயக்குநர் / முதல்வரை உடன்; சந்திக்குமாறு கேட்டு கொள்ளப்படுகிறது. தொடர்புக்கு அலுவலக தொலைபேசி எண்: 0461 – 2340133.