இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு : தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மூலம் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் ஒவ்வொரு வெள்ளிக்கிழமை காலை 10.30 மணி அளவில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறவுள்ளது
(புதிய முகவரி : ஆசிரியர் காலனி 1ம் தெரு, பாண்டியன் கிராம வங்கி பின்புறம்). இத்தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் தனியார் நிறுவனங்கள் பங்கேற்க உள்ளனர். இத்தனியார் வேலைவாய்ப்பு முகாமில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, பட்டப்படிப்பு, பி.இ., டிப்ளமோ, ஐடிஐ மற்றும் கணிணி பயிற்சி கல்வித் தகுதியுடைய பதிவுதாரர்கள் கலந்து கொள்ளலாம்.
மேற்கண்ட தகுதியுள்ள, தனியார்துறையில் பணிபுரிய விருப்பம் உள்ளவர்கள் தங்களது பயோடேட்டா மற்றும் கல்வி சான்றுகளுடன், தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறும் முகாமில் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. தனியார்துறை நிறுவனங்களில் பணி நியமனம் செய்யப்படும் நேர்வில் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து ஆகாது எனவும், இம்முகாமில் கலந்து கொள்வதற்கென பயணப்படி எதுவும் வழங்கப்படமாட்டாது எனவும் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.