செய்துங்கநல்லூர் அருகே உள்ள தீராத்திகுளம் கள்ளவாண்ட சுவாமி கோயில் கொடை விழா நடந்தது.
ஸ்ரீவைகுண்டம் தாலூகாவில் மட்டுமே சுமார் 12 இடங்களில் கள்ளவாண்ட சுவாமிகள் கோயில் உள்ளது. இந்த கோயிலில் வேட்டை பானை போடுதல் நிகழ்ச்சி பிரபலம். இதை காண பக்தர்கள் பல ஊர்களில் வந்து கூடுவார்கள். தீராத்திகுளத்தில் கள்ளவாண்ட சுவாமி கோயில் கொடை விழா நடந்தது. இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு தீர்த்தம் எடுத்து வரப்பட்டது. அதன்பின் கும்பம் ஏற்றப்பட்டது. தொடர்ந்து பொங்கலிடுதல் அலங்காரம், தீபாரதனை நடந்தது. அதன் பின் சுவாமி வேட்டைக்கு செல்லுதல் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து வேட்டைபானை போடுதல் நிகழ்ச்சி நடந்தது. அதன் பின் பக்தர்களுக்கு அருள் வாக்கு வழங்கும நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை தீராத்திகுளம் கள்ளவாண்ட சுவாமி கோயில் கொடை விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.