தாமிரபரணி புஷ்கரத்தினை முன்னிட்டு முத்தாலங்குறிச்சி காமராசு எழுதிய ‘நவின தாமிரபரணி மஹாத்மியம்’ வீடியோ நூலாக 21 ந்தேதி நெல்லையில் வெளியிட பட உள்ளது.
தாமிரபரணியை பற்றி எழுதிய நூல்களில் வடமொழியில் எழுதப்பட்ட தாமிரபரணி மஹாத்மியம் மிகச்சிறப்பு பெற்றது. தற்போது தமிழில் பல தொகுப்பாசிரியர்கள் இந்த நூலை தமிழகாக்கம் செய்து வெளியிட்டு வருகிறார்கள். ஆனால் தாமிரபரணி தோன்றும் இடத்தில் இருந்து கடலில் கலக்கும் வரை முழுமையான நூல் எதுவும் தமிழில் இல்லை. இதற்கான ஏற்பாடுகளை எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு செய்து வந்தார். கடந்த 25 வருட காலமாக பொதிகை மலை குறித்தும், தாமிரபரணி கரைகள் குறித்தும் பல நூல்களை எழுதிய எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு தற்போது நவின தாமிரபரணி மஹாத்மியம் என்னும் நூலை உருவாக்கியுள்ளார். 538 பக்கங்களை கொண்ட இந்த நூல் தாமிரபரணி தோன்றும் இடத்தில் இருந்து கடலில் கலக்கும் வரை உள்ள தீர்த்தக்கட்டங்கள் மற்றும் கோயில்கள் வரலாற்றை நமக்கு எடுத்துரைக்கிறது. அதோடு மட்டுமல்லாமல் இந்த நூலில் நவினமாக கீ. ஆர் .கோட் என்ற முறையில் ஒவ்வொரு பகுதிக்கும் வீடியோ லிங்கை நூலில் கொடுத்துள்ளார்கள். எனவே தமிழ் எழுத படிக்க தெரியாத தமிழ் பேசத்தெரிந்தவர்கள் கூட இந்த நூலில் உள்ள பார்கோடை நவின செல்போன் மூலம் ஸ்கேன் செய்து, வீடியோவில் எழுத்தாளர் பேசுவதை கேட்டுக்கொள்ளலாம். இது வரை நதிகள் வரலாற்றில் இதுபோன்ற முயற்சியை யாரும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடதக்கது.
இந்த வீடியோ தொகுப்பை எடிட்டிங் செய்வது மற்றும் தொழில் நுட்பத்தினை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழக சேனலிசம் இரண்டாம் ஆண்டு முதுகலை மாணவர் அபிஷ்விக்னேஷ் செய்துள்ளார். (இவர் சென்னை இந்து பத்திரிக்கையில் இண்டர்சீப் பணியாற்றியவர்) எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசுவின் மகன். இந்த நூலில் தாமிரபரணி பாபநாசத்தில் இருந்து புன்னகாயல் வரை தற்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை பயன்படுத்தியுள்ளார்கள். அதற்காக புகைப்பட கலைஞராக முத்தாலங்குறிச்சி காமராசுவின் சிஷ்யர் சுடலைமணி செல்வன் பணிபுரிந்துள்ளார். வேளாக்குறிச்சி ஆதினம் ஸ்ரீலஸ்ரீ சத்யஞானமகாதேவ தேசிக பராமச்சாரிய சுவாமிகள் ஏற்பாடில் இந்த நூல் வெளியிடப்படுகிறது.
21 ந்தேதி காலை தைபூச மண்டபத்தில் இந்த நூல் வெளியிட உள்ளார்கள். இதில் முக்கிய பிரமுகர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.