தாமிரபரணி ஆற்றுக்கரையோரங்களில் அனுமதியின்றி செங்கல் தயாரிக்கும் பணிகளில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தாசில்தார் தாமஸ் பயஸ் அருள் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மங்கலகுறிச்சியை சேர்ந்த சுப்பிரமணியன் உள்ளிட்ட பொதுமக்கள் கலெக்டரிடம் அளித்துள்ள மனுவில், ஸ்ரீவைகுண்டம் தாலுகா மங்கலகுறிச்சி பஞ்சாயத்திற்கு உட்பட்ட மேலமங்கலகுறிச்சியில் தனியாருக்கு சொந்தமான தோட்டத்தில் அரசு அனுமதி பெறாமலும் செங்கல் தயாரிப்பதற்காக அளவிற்கு அதிகமாக குறுமண்ணை அள்ளிக்குவித்து வைத்துள்ளார். குறுமண்ணை அள்ள ராட்ஷத பொக்லைன் இயந்திரங்கள் பயன்படுத்தப்படுவதாலும் கனரக வாகனங்கள் வந்து செல்வதாலும் சாலை சேதமடைந்துள்ளது.
குறுமண் அள்ளப்படும் இடத்திற்கு அருகில் ஆற்றின் உட்பகுதியில் பல்வேறு கிராமங்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் குடிநீரேற்று நிலையங்கள் உள்ளன. ஆற்றின் கரையோரத்தில் சுமார் 50 மீட்டருக்கும் குறைவான தொலைவில் விதிமுறைகளை மீறி குறு மண்ணை அள்ளுவதால் நீராதா ரம் பாதிக் கும் நிலை ஏற் பட் டுள் ளது.
இது குறித்து தாசில்தார் தலைமையிலான வருவாய் துறையினர் ஆய்வு செய்து எச்சரிக்கை விடுத்த பின்னரும் ஆற்றின் கரையோரத்தில் செங்கல் தயா ரிக் கும் பணி தொடர்ந்து நடை பெற்று வரு கி றது.
எனவே, விதி மு றை களை மீறி யும் உரிய அனு மதி பெறா ம லும் ஆற்றுக்கரையோரத்தில் செங்கல் தயாரிப்பதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண் டும் என கூறியிருந்தனர்.
இந் நி லை யில் தாசில் தார் தாமஸ் பயஸ் அருள், துணை தாசில்தார் ஜஸ்டின் உள் ளிட்ட வரு வாய் துறை யி னர் மங் க ல கு றிச்சி தாமிரபரணி ஆற் றுக் கரை யோ ரத் தில் விதி மு றை களை மீறி செயல்படுவதாக கூறப் ப டும் செங் கல் தயா ரிக் கும் இடத் தில் ஆய்வு செய்து அனுமதியின்றி செங்கல் உற்பத்தியில் ஈடு ப டக்கூ டாது என எச்சரித்தனர்.
பின்னர் தாசில்தார் தாமஸ் பயஸ் அருள் கூறுகையில், ‘‘மண் சார்ந்த தொழிலான செங்கல் உற்பத்திக்கு என பல்வேறு விதிமுறைகளும் கட்டுபா டு க ளும் உள் ளன. இந்த விதி மு றை களை மீறி செயல் ப டு ப வர் கள் மீது கடும் நட வ டிக்கை எடுக் கப் ப டும் ’’ என் றார்.