செய்துங்கநல்லூர் அருகே கால்வாய் கிராமத்தில் விவசாயி மர்மான முறையில் இறந்தார்.
கால்வாய் காலனி தெருவை சேர்ந்தவர் மாடசாமி மகன் உக்கிரபாண்டி (40). விவசாயி. இவர்கள் நேற்று முன்தினம் அதே பகுதியை சேரந்த சுப்பையா என்பவரது வயலில அறுவடைக்கு பின் நடந்த கறி விருந்தில் கலந்து கொண்டு சாப்பிட்டுள்ளார். அதன்பிறகு இரவு 8 மணியளவில் கால்வாய் சுடலை கோயில் அருகே மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து அவரது அண்ணன் வீரபுத்தரன் போலீசில் புகார் செய்தார்.
ஸ்ரீவைகுண்டம் டி.எஸ்.பி. சகாயம் ஜோஸ், செய்துங்கநல்லூர் இன்ஸ்பெக்டர் சோமன்ராஜ் மற்றும் போலிசார் சம்பவ இடத்துக்கு வந்து உக்கிர பாண்டி உடலை கைப்பற்றி ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரை யாராவது அடித்துக் கொலை செய்தார்களா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.