செய்துங்கநல்லூர் அருகே பரிதாபம். கர்ப்பிணி பெண் தூக்கு போட்டு தற்கொலை.
செய்துங்கநல்லூர் அருகே கீழ தூதுகுழியை சேர்ந்தவர் மாரிச்செல்வம். இவர் பெயிண்டர் வேலை செய்து வருகிறார். இவருக்கும் களக்காடு அருகே உள்ள பொத்தையை சேர்ந்த முருகன் மகள் ராமலெட்சுமி(20) என்பவருக்கும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. தம்பதிகள் கீழதூதுகுழியில் உள்ள சொந்த வீட்டில் வாழ்ந்து வந்தனர். இவர்களுக்கு மகாராஜன்(1) என்ற குழந்தையும் உள்ளது. ராமலட்சுமி 9 மாத கர்ப்பிணியாகவும் உள்ளார். நேற்று இரவு மாரிச்செல்வம் குடிபோதையில் வந்தாக கூறப்படுகிறது. மேலும் சீட்டு பணத்தினை அவர் செலவு செய்தாகவும் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த ராமலெட்சுமி கணவரிடம் பேசமாமல் கதவை உள்பக்கம் தாளிட்டு கொண்டாராம்.
அதிகாலை 4 மணி அளவில் மாரிச்செல்வம் கதவை தட்டி பார்த்த போது திறக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்தவர் அக்கம் பக்கத்தில் இருந்தவர்களை கூப்பிட்டு கதவை உடைத்து பார்த்த போது ராமலெட்சுமி தூக்கில் தொங்கியது தெரியவந்தது.
இதுகுறித்து செய்துங்கநல்லூர் போலிஸ் இன்ஸ்பெக்டர் சோமன்ராஜன் உடலை கைபற்றி தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தார். அங்கு வைத்து சப்கலெக்டர் பிரசாத் விசாரணை நடத்தவுள்ளார். கைகுழந்தையை விட்டு விட்டு கர்ப்பிணி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. உறவினர்கள் சோகத்துடன் உள்ளனர்.