செய்துங்கநல்லூரில் இந்து முன்னணி சார்பில் வாஜ்பாய் படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்து முன்னணி கருங்குளம் தெற்கு ஒன்றிய தலைவர் இசக்கி முத்து தலைமை வகித்தார். வடக்கு ஒன்றிய தலைவர் வேம்பன் , வியாபாரிகள் சங்க பொருளாளர் பால்சாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் இசக்கி ஆகியோர் முன்னிலை வகித்தனர். திமுக இளைஞரணி அமைப்பாளர் குமார், அம்மா மக்கள் முன்னேற்ற கழக ஒன்றிய செயலாளர் சிவ சுப்பிரமணியன், திமுக பட்டு உள்பட பலர் கலந்துகொண்டனர்.
செய்துங்கநல்லூர் அய்யனார்குளம் பட்டியில் பி.ஜே.பி சார்பில் வாஜ்பாய் படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
கருங்குளம் ஒன்றிய தலைவர் பெரியசாமி தலைமை வகித்தார். செயலாளர் முருகன் முன்னிலை வகித்தார். சோமசுந்தரம் மொட்டை அடித்து அஞ்சலி செலுத்தினார். மாவட்ட சமூக வலைதளபிரிவு செயலாளர் குணசேகர், வணிக பிரிவு செயலாளர் கேசவன், ஒன்றிய சிறுபான்மை பிரிவு தலைவர் குமார், ஸ்ரீவைகுண்டம் உள்ளாட்சி பிரிவு செயலாளர் முருகன், சங்கரபாண்டின், சண்முகவேல், முப்பிடாதி, புங்கமுடையார், சுடலைகண்ணு, தங்கம், பேச், சங்கலி பூதத்தான், சுப்பிரமணியன் உள்பட பலர் கலந்துகொண்டனர். இதே போல் கருங்குளம் பஸ்நிலையம், செய்துங்கநல்லூர் போன்ற இடங்களிலும் அஞ்சலி செலுத்தப்பட்டது.