செய்துங்கநல்லூர் தொழில் வர்த்தக சங்கம் சார்பில் கொரோனாவினால் பாதிக்கப்பட்ட துப்புரவுப்பணியாளர் மற்றும் ஏழை எளிய மக்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டது.
செய்துங்கநல்லூர் வெங்கடேஸ்வரா மகாலில் நடந்த நிகழ்ச்சிக்குச் சங்கத் தலைவர் அய்யாக்குட்டி தலைமை வகித்தார். செயலாளர் பிச் ச பூபாலராயன், செய்துங்கநல்லூர் பஞ்சாயத்துத் தலைவர் பார்வதி நாதன், செய்துங்கநல்லூர் ஆய்வாளர் ராஜ சுந்தர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு வரவேற்றார். ஸ்ரீ வைகுண்டம் டி.எஸ்.பி வெங்கடேஷ் சிறப்புரையாற்றிப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை வழங்கினார். ஸ்ரீ வைகுண்டம் வருவாய் ஆய்வாளர் அய்யனார், சப் இன்ஸ்பெக்டர் ஜெகன், சங்க துணைத் தலைவர் மந்திரம், சுடலைமணி, செயற்குழு உறுப்பினர் கனகராஜ் பூபாலராயர், செல்வ விநாயகம், பௌசர் அலி, ஸ்வீட் கணேசன், சுப்பையா, கனகராஜ், நூலகர் தளவாய், பஞ்சாயத்து உறுப்பினர் பட்டு ராஜ் உள்படப் பலர் கலந்துகொண்டனர். பொருளாளர் பால்சாமி நன்றி கூறினார்.


