செய்துங்கநல்லூரில் முருக பக்தர்களுக்கு அறிவுரை கூறி மிளிரும் ஸ்டிக்கரை போலிசார் ஒட்டி வழியனுப்பி வைத்தனர்.
தற்போது தைபூசத்திருநாளை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு நடை பயணமாக ஏராளமான பக்தர்கள் செல்கின்றனர். இவர்கள் ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் உட்பட நெல்லை மாவட்டத்தில் தென்காசி, புளியங்குடி, சங்கரன் கோயில் பகுதியில் இருந்து நடைபயணமாக செல்கின்றனர். நெல்லை திருச்செந்தூர் மெயின் ரோட்டில் அலகு குத்தியும், காவடி எடுத்தும், கூட்டம் கூட்டமாக செல்கின்றனர். இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இரவு நேரத்தில் முன்னே செல்லும் பக்தர்கள் சரிவர தெரிவதில்லை. எனவே அவர்கள் கையில் சிகப்பு ஸ்டிக்கர் ஒட்டிய கம்பு, அல்லது தங்களது முதுகு புறத்தில் ஸ்டிக்கர் ஒட்டி செல்ல காவல்துறையினரால் அறிவுறுத்தப்படுகின்றனர்.
ஆனாலும் பலர் இதை பின்பற்றுவது இல்லை. இதற்கிடையில் தூத்துக்குடி மாவட்ட எல்கையில் செய்துங்கநல்லூரில் இவர்களை போலிசார் இன்ஸ்பெக்டர் சுந்தரேசன் தலைமையில் சந்தித்து மெயின் ரோட்டில் விபத்து இல்லாமல் நடந்து செல்வது எப்படி என அறிவுறுத்தினர். மேலும் இரவில் மிளிரும் ஸ்டிக்கரை அவர்கள் தோளில் சுமந்து வரும் துணிப்பையில் ஓட்டினார்.
செய்துங்கநல்லூர் காவல்நிலையம் முன்பு நடந்த இந்த நிகழ்ச்சியில் சப்இன்ஸ்பெக்டர் அனந்த முத்துராமன், கோபால், கணேசன் உள்பட போலிசார் பக்தர்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டினர்.