செய்துங்கநல்லூர் வளர்ந்து வரும் நகரமாகும். இங்கு மிகப்பெரிய பஸ் நிலையம், ரயில் நிலையம்போன்ற மக்கள் அதிகமாக கூடும் இடங்கள் உள்ளது. போஸ்ட் ஆபிஸ், இளநிலை மின் பொறியாளர் அலுவலகம், கருங்குளம் ஒன்றிய அலுவலம், கால்நடை ஆஸ்பத்திரி, காவல்நிலையம்,பள்ளி நிறுவனங்கள் உள்பட பல அலுவலகங்கள் உள்ளன. புதன் கிழமை தோறும் இங்கு ஆயிரக்கணக்கான மக்கள் கூடுக்கின்ற மிகப்பெரிய சந்தை உள்ளது. இந்த சந்தையில் நூற்றுக்கணக்கான வியாபாரிகள் கூடி பல பொருள்களை விற்பனை செய்கிறார்கள். சுற்று பகுதியில் உள்ள 42 கிராமங்களில் இருந்து சந்தைக்கு 10 ஆயிரம் மக்கள் கூடுவார்கள். ஆனால் செய்துங்கநல்லூரில் பொது கழிவறை வசதி இல்லை. இதனால் பொதுமக்கள் மிகவும் வேதனை அடைகின்றனர்.
பெரும்பாலும் அதிகமாக மக்கள் கூடும் செய்துங்கநல்லூரில் கழிவறை வசதி செய்து கொடுக்கப்படவில்லை. எனவே இவ்வூரில் உள்ள சந்துக்கள் அ னைத்தும் பொது கழிவறையாகி, எங்கு திரும்பினாலும் சுகாதரம் அற்று காணப்படுகிறது. துர்நாற்றம் வீசுகிறது. இங்கு நவீன கட்டண கழிப்பறை அமைத்தால் கூட பஞ்சாயத்துக்கு வருமானம் வரும் வாய்ப்பு உள்ளது. எனவே உடனடியாக இங்கு கழிவறை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.