செய்துங்கநல்லூரில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா சார்பில் பதாகை ஏந்தி தூத்துக்குடி சம்பவத்தினை கண்டித்து கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
செய்துங்கநல்லூர் ஜாமிய பள்ளிவாசல் முன்பு நடந்த நிகழ்ச்சிக்கு திருவை பகுதி தலைவர் அப்துல் காதல் தலைமை வகித்தார். எஸ்.டி.பி. ஐ. கட்சியின் கிளை செயலாளர் இஸ்மாயில் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் அப்துல் ரவுப், நவ்பல், இக்ஸான், சிந்தா, அன்சர், சேக், தமீம், முத்து வாப்பா, வாசிம், அபு, கரீம் ஆகியோர் கலந்துகொண்டனர்.