செய்துங்கநல்லூர் பஜாரில் பஸ் கட்டண உயர்வை எதிர்த்து இந்திய கம்னியூஸ்ட் மார்க்கிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஒன்றிய குழு உறுப்பினர் குணேஸ்வரி தலைமை வகித்தார். ஒன்றிய குழு உறுப்பினர் மணி முன்னிலை வகித்தார். பஸ் கட்டண உயர்வை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட குழுவை சேர்ந்த பொன்ராஜ், மாரியப்பன் ஆகியோர் சிறப்புரையாற்றினார்.
கொம்பையா, மணி, முருகன், ராமசந்திரன், மாரிமுத்து, சிவசுப்பிரமணியன், சக்திவேல், மாதர் சங்க நிர்வாகி மாரியம்மாள், சுடலை வாலிபர் சங்கத்தினை சேர்ந்த காதர், ராஜா உள்பட பலர்கலந்து கொண்டனர்.